Friday, October 29, 2010

கொலையும் செய்வாள்......

கிருஷ்ணகிரி அருகே 2 நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக சென்ற காரை நிறுத்தினார்கள்.

அந்த கார் நிற்காமல் சென்றதால் போலீசார் விடாமல் துரத்தினார்கள். வேகமாக சென்ற கார் நாகரசம்பட்டி அருகே ரோட்டோரம் இறங்கியது. அந்த வேளையில் காரில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி தப்பியோடினார்கள்.

விரட்டி சென்ற போலீசார் காரை சோதனையிட்ட போது காருக்குள் ஒரு ஆண் பிணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த பசுவராஜ் (வயது 28) என்பது உறுதி செய்யப்பட்டது.

பசுவராஜை அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமியார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கடாசலம் ஆகியோர் கொலை செய்துள்ளது வெட்ட வெளிச்சம் ஆனது. மேலும் பிணத்தை ராயக்கோட்டை ரெயில்வே பாதையில் வீசிவிட எடுத்துச்செல்லும் போது போலீசார் துரத்தியதால் பாதை மாறி சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கொலையுண்ட பசுவராஜின் மனைவி ராஜேஸ்வரி, அவரது தாயார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கசாடலம், அவரது நண்பர் சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்

பசுவராஜூக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு முன்பே, ராஜேஸ்வரிக்கும், வெங்கடாசலத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பின்பும், கள்ளக்காதலை இருவரும் வளர்த்துள்ளனர்.

இதையறிந்த பசுவராஜ், மனைவி மற்றும் கள்ளக்காதலன் வெங்கடாசலத்தை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடாசலத்துடன் ராஜேஸ்வரி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசில் பசுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியை கணவர் பசுவராஜுடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் வெங்கடாசலத்துடன் மனைவி ராஜேஸ்வரி ஓடிய சம்பவம், பசுவராஜுக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியை தினமும் அடித்து சித்ரவதை செய்தார். இதை தட்டிக்கேட்ட தாய் சவுந்தரியையும் அடித்தார். இதையடுத்து அவரது கொடுமை தாங்காமல் பசுவராஜை கொலை செய்ய தாய், மகள் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் திட்டம் தீட்டினார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாப்பாட்டில் 3 முறை விஷம் வைத்து கொடுத்தனர். ஆனால் அவர் சாகாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த கொலை முயற்சி சமீபத்தில் பசுவராஜுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து ஓசூரில் உள்ள தனது அண்ணனுக்கு தெரிவித்தார். இதுகுறித்து பேசுவதற்கு ஓரிரு நாளில் வருவதாக அவரது அண்ணன் கூறினார்.

அண்ணன் வந்தவுடன், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக பசுவராஜ் அனைவரையும் மிரட்டினார். இதனால் பயந்து போன அவர்கள், பசுவராஜை கொலை செய்ய மீண்டும் முடிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த பசுவராஜை, சுடிதார் துப்பட்டாவால் ராஜேஸ்வரி, அவரது தாய் சவுந்தரி ஆகிய 2 பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி படுகொலை செய்தனர்.

பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் வெங்கடாசலத்திடம் கூறினர். வெங்கடாசலம் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் வந்தார். பின்னர் உடலை ராயக்கோட்டை ரெயில்வேகேட் அருகே வீசிவிட்டு செல்லலாம் என்று காரில் வந்த போது போலீசார் விரட்டினர். தப்பிவிட வேண்டும் என்று கருதி காரை திருப்பத்தூர் ரெயில்வே கேட்டுக்கு வேகமாக ஓட்டினார்கள். ஆனால் போலீசார் அதற்குள் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.

No comments:

Post a Comment