Tuesday, September 21, 2010

தகாத உறவு


பிரசாத் நகரை சேர்ந்தவன் லலித் ரதாவால் (22). பள்ளி வேன் டிரைவர். பாபா நகரில் வசிக்கும் விதவை பெண்ணின் 12 வயது மகளையும் 10 மற்றும் 7 வயதுள்ள மகனையும் லலித் தனது வேனில் பள்ளிக்கு கூட்டி செல்வான். ஆனால் இக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் இரண்டு தம்பிகளுடனும் தகாத உறவு கொண்டுள்ளான். இவனோடு நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொடுமையை செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள். அதில் ஒருவன் சிறுமி படிக்கும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவன். இவர்கள் கும்பலாக சேர்ந்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக இந்த கும்பல் குழந்தைகளை இப்படி சித்ரவதை செய்துள்ளது. அவர்களுக்கு போதை ஊசியும் போட்டுள்ளனர். தகாத உறவு கொள்ளும் காட்சியை செல்போனிலும் படம் பிடித்து வைத்துள்ளனர். வெளியே சொன்னால் உங்கள் அம்மாவை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் இந்த கொடுமையை பற்றி குழந்தைகள் வெளியே சொல்லாமல் இருந்தன. சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் உடலில் ஊசி குத்தியதற்கான அடையாளங்களை பார்த்து தாய் சந்தேகமடைந்தார். சிறுமியிடம் விசாரித்தபோதுதான் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நிராதரவாக இருக்கும் அப் பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேன் டிரைவர் லலித்திடம் கேட்டார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக அவரையும் லலித் மிரட்டினான். வேறு வழியில்லாத பெண், தன் வீட்டில் குடியிருப்பவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவர் தனக்கு தெரிந்த அரசியல்வாதியிடம் கூற அந்த அரசியல்வாதிதான் தைரியம் அளித்து இதுபற்றி போலீசில் புகார் செய்ய வைத்திருக்கிறார்ர. டிரைவர் லலித் கைது செய்யப்பட்டான். நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்ற அவனை அழைத்துவந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை அடித்து உதைத்தது. ஆத்திரத்தோடு இருந்த கூட்டத்திடம் இருந்து அவனை போலீசார் மீட்டு. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

2 comments:

  1. நல்ல லே அவுட்,நல்ல போஸ்ட்,ஆனால் இந்த வொர்டு வெரிஃபிகேஷனை எடுக்கவும்

    ReplyDelete
  2. உங்களின் இந்த பதிவை எல்லா திரட்டியிலும் இணையுங்கள். இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கும். இந்த கொடுமையை செய்த கொடூரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete