நெல்லை அருகே இரண்டு கள்ளக்காதலிகளை கொடூரமாக கொலை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர், தாமும் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசின் 9ம் பட்டாலியன் படையில் ஏட்டாக பணிபுரிபவர் உமாமகேஸ்வரி (36). 1997 முதல் தற்போது வரை அங்கேயே பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி, கோரி காலனியாகும். இவரது கணவர் இசக்கியப்பன் (40), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் ஏட்டாக உள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றுகிறார்.
மணிமுத்தாறு பட்டாலியன் அருகே பழைய குடியிருப்பில் தங்கி, பணிக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு சுதர்சன் (9) என்ற மகனும், சுபத்ரா (5) என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். உமாமகேஸ்வரியின் தாயார் மரியதங்கம் இவர்களுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உமாமகேஸ்வரி, பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி, பட்டாலியன் அலுவலகத்திற்கு சென்றார்; நேற்று காலை வீடு திரும்பவில்லை. பட்டாலியன் அலுவலகம் அருகே இடிந்து போன கட்டடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த வழியே சென்ற பெண் காவலர் ஒருவர் பார்த்து, பட்டாலியன் அலுவலகத்திற்கு தகவல் கூறினார்.
இறந்து கிடந்த உமாமகேஸ்வரியின் வலதுதாடையில் பலத்த அரிவாள் வெட்டு இருந்தது. உடலில் வேறு சில காயங்களும் இருந்தன. நள்ளிரவில் கொலை நடந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தம் காய்ந்திருந்தது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கொடூரமான கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துப்பறியும் நாய், தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து உமாமகேஸ்வரியின் தாயார் தந்த புகாரில், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் காவலராக பணியாற்றும் இசக்கிமுத்து என்பவர் உமாமகேஸ்வரியை தம்முடன் வாழ வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இசக்கிமுத்து (32) நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர். மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரரான இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், இவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இசக்கிமுத்து, கீதா (39) என்ற பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்தார். இசக்கிமுத்துவின் உறவினரான கீதாவின் கணவர் பச்சமுத்து, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். இவர், அண்மையில் வெளிநாடு சென்று விட்டார். அதன் பின், கீதா அவரது தாயின் சொந்த ஊரான திட்டுவிளையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து அடிக்கடி இங்கு வந்து, கீதாவை சந்தித்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவில் பெண் போலீஸ் உமாமகேஸ்வரியை வெட்டி கொன்று விட்டு, இசக்கிமுத்து பைக்கில் நள்ளிரவில் பூதப்பாண்டிக்கு வந்தார். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்துக்கு சென்று, மொபைல்போனில் அங்கு வரும்படி கீதாவை அழைத்துள்ளார். ஆனால் கீதா செல்ல மறுத்தார்.மறுநாள் அதிகாலை, கீதாவின் வீட்டுக்கு சென்ற இசக்கிமுத்து, அவரை பாழடைந்த கட்டடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு, இசக்கிமுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இசக்கிமுத்து மணிமுத்தாறு பட்டாலியனில் துப்பாக்கிகளை பாதுகாக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இதை பயன்படுத்திய அவர், ஒரு துப்பாக்கியை திருடிக் கொண்டு வந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து 26 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட கீதாவுக்கு சுருதி (15) என்ற மகளும், திவாகர் (13), பிரபாகர் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

No comments:
Post a Comment