Thursday, October 7, 2010

உல்லாசம்


மாதவரம் பொன்னியம் மன் மேடு சந்திரபிரபு காலனியைச் சேர்ந்தவர் சுந்தரவதனம். கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி சாந்தி (42). ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். சுந்தரவதனம் வேலைக்கு சென்ற சமயத்தில் வீட்டில் சாந்தி படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

இந்த மர்ம சாவு குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினர்.

இதில் சாந்தியின் கள்ளக் காதலன் லோகநாதன் (43) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இவர் புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர். மெக்கானிக்கடை வைத்துள்ளார்.

டிரைவர் சுந்தரவதனம் தனது காரை ரிப்பேர் பார்க்க லோகநாதனின் மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்வதுண்டு. அப்போது அவரது மனைவியும் உடன் சென்று வருவார்.

இதில் மெக்கானிக் லோகநாதனுக்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சுந்தரவதனம் வீட்டில் இல்லாத சமயங்களில் லோகநாதன், சாந்தியை சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். சாந்தியின் மகள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் கடனும் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டிருக்கிறார். இப்போது பணம் இல்லை என்று சாந்தி கூறியதால் ஆவேசத்தில் சேலையால் கழுத்தை நெரித்து சாந்தியை கொன்று விட்டு ஓடி விட்டார்.

சாந்தியின் கணவரிடம் போலீசார் விசாரிக்கும் போது லோகநாதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார் என்று கூறியதால் சந்தேகப்பட்டு போலீசார் லோகநாதனை பிடித்து விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment