Monday, November 8, 2010

சந்தேகம்


கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கடம்பன் இவரது மகள் கவிதாபாரதி(23). இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த அருள்மொழி(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குழந்தை இல்லை. அருள்மொழி திருப்பூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்திலுள்ள வீட்டு தண்ணீர் தொட்டியில் கவிதாபாரதி பிணமாக கிடந்தார். வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே கிடந்தது. கவிதாபாரதியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தங்கச்செயின் காணாமல் போயிருந்தது. துடியலூர் பெண் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவர் அருள்மொழியை கைது செய்தனர். திருமணமாகி ஓராண்டுக்குள் கவிதாபாரதி மர்மமான முறையில் இறந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அருள்மொழி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கவிதாபாரதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது; ஆண் நண்பர்கள் அதிகளவில் இருந்தனர். தினமும் இரவு நேரத்தில் அவளுக்கு மொபைல் போனில் அழைப்புகள் வரும். நீண்ட நேரம் பேசுவாள். கேட்டால் எதையாவது சொல்லி மழுப்புவாள். கோவையில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். ஆனால், அடிக்கடி அங்கு போகாமல் ஆண் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். இதனால், அவளை கொலை செய்ய தீர்மானித்து கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கழிவறைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த தரைமட்டத் தொட்டியில் தள்ளி கொலை செய்தேன். போலீசாரை திசை திருப்ப கவிதாபாரதியிடம் இருந்த எட்டு சவரன் தங்க செயின் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பைக்கை சில அடிதூரம் திருடர்கள் இழுத்து சென்றதை போல செட்-அப் செய்து நாடகமாடினேன். இருந்தாலும், போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அருள்மொழி கூறினார்.

No comments:

Post a Comment