Monday, October 4, 2010

காமவெறியன்


பாளை கொக்கிரகுளம் பகுதியைச்சேர்ந்த சிறுமி முருகம்மாள் என்ற 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தாமிரபரணி ஆற்றில் ஒரு சாக்கு மூட்டையில் கிடந்திருக்கிறாள். அவளது அடிவயிற்றில் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக்காயமும், உடலில் ஆங்காங்கே நகக்கீரல்களும், பல்லால் கடித்த காயங்களும் இருந்தன. பின் தலையில் பயங்கரமாக தாக்கியதில் மண்டை உடைந்து பெரிய ரத்தக் காயமும் இருந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை ஒரு லுங்கி மற்றும் போர்வையில் சுற்றி சாக்கு மூட்டைக்குள் திணித்து ஆற்றில் வீசப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடினார்கள்.
இதில் சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வேலு என்ற கழுதைவேலு (வயது 48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது வேலு, சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டான் அந்த் காம கொடூரன். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தனது சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி என்றும். அங்கு தங்கி இருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்த்தாகவும். சம்பவத்தன்று தனது மனைவி மகள் வீட்டுக்கு சென்று விட்டதால் தனிமையாக இருந்த தனக்கு “செக்ஸ்” வெறி ஏற்பட்டது என்றும். அப்போது பக்கத்து வீட்டுச்சிறுமி முருகம்மாள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் தனக்கு காம வெறி அதிகரித்தது அவளது வாயை துணியால் பொத்தி கற்பழித்த்தாகவும். இதனால் போலீசில் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து, சிறுமியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்தததாக வாகுமூலம் அளித்துள்ளான். இவனை போன்ற காமவெறியன்களுக்கு தயவு தாட்சனையின்றி கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் அடுத்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்.


No comments:

Post a Comment