தேனி மாவட்டம், போடி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (50). மகன் கார்த்திக் (25). இவரது மனைவி ஏத்தக்கோயில் பழனிச்சாமி மகள் பவுன்(23). இரண்டு ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் தொழில் செய்ய, குடும்பத்துடன் மங்களூரு சென்றார். அங்கு பவுனுக்கும், கருப்பையாவிற்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை கார்த்திக் கண்டித்தார். தொடர்பு நீடித்ததால், கார்த்திக் கடந்த ஆண்டு போடி அருகே, மீனாட்சிபுரம் கோவிலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.
இந்நிலையில், அவரது உடல் கருகிய நிலையில் கோவில் கருவறைக்குள் கிடந்தது. போடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை, ஆறு மாதத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். கருப்பையா, பழனிச்சாமி, பவுன் ஆகியோரை கைது செய்தனர். மங்களூரில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த கார்த்திக்கை, கருப்பையா பின் தொடர்ந்து வந்து சமரசம் செய்தார். பழனிச்சாமி முன்னிலையில், கள்ளத்தொடர்பினை விட்டு விடுவதாக கூறியும், ஏற்க மறுத்து கார்த்திக் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த கருப்பையா, பழனிச்சாமி சேர்ந்து கார்த்திக்கை வெட்டி கொன்று, உடலை கோவில் கருவறைக்குள் வைத்து எரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். சமீபத்தில் வந்த சிந்து சமவெளி திரைபடம் போல் உள்ளது.

No comments:
Post a Comment