Tuesday, November 16, 2010

16 வயதினிலே


ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, November 13, 2010

சிந்து சமவெளி

தேனி மாவட்டம், போடி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (50). மகன் கார்த்திக் (25). இவரது மனைவி ஏத்தக்கோயில் பழனிச்சாமி மகள் பவுன்(23). இரண்டு ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் தொழில் செய்ய, குடும்பத்துடன் மங்களூரு சென்றார். அங்கு பவுனுக்கும், கருப்பையாவிற்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை கார்த்திக் கண்டித்தார். தொடர்பு நீடித்ததால், கார்த்திக் கடந்த ஆண்டு போடி அருகே, மீனாட்சிபுரம் கோவிலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் கருகிய நிலையில் கோவில் கருவறைக்குள் கிடந்தது. போடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை, ஆறு மாதத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். கருப்பையா, பழனிச்சாமி, பவுன் ஆகியோரை கைது செய்தனர். மங்களூரில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த கார்த்திக்கை, கருப்பையா பின் தொடர்ந்து வந்து சமரசம் செய்தார். பழனிச்சாமி முன்னிலையில், கள்ளத்தொடர்பினை விட்டு விடுவதாக கூறியும், ஏற்க மறுத்து கார்த்திக் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த கருப்பையா, பழனிச்சாமி சேர்ந்து கார்த்திக்கை வெட்டி கொன்று, உடலை கோவில் கருவறைக்குள் வைத்து எரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். சமீபத்தில் வந்த சிந்து சமவெளி  திரைபடம் போல் உள்ளது.  



ஆயிரத்தில் ஒருவன்





Tuesday, November 9, 2010

கள்ளக்காதல்


பாளை அருகே உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை. இவரது மகள் சுதா என்ற சுப்புலட்சுமி (30). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கூலிவேலை செய்து வந்த சுதாவுக்கு கீழப்புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்வதி (வயது 35) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பார்வதிக்கு திருமணமாகி மாரிசெல்வி என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விசயம் தெரிந்து ஆத்திரமடைந்த அய்யாபிள்ளை, மகள் சுதாவை கண்டித்தார்.

இதனால் கள்ளக்காதலியை சந்திக்க முடியாமல் தவித்த பார்வதி, நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சுதா வீட்டிற்குள் நுழைந்தார். கள்ளக்காதலனை எதிர்பார்த்திருந்த சுதா அவரை வீட்டின் மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நள்ளிரவு மாடியில் சத்தம் கேட்பதை அறிந்த சுதாவின் தம்பி மாரி செல்வம், தந்தை அய்யாபிள்ளை, தாயார் செல்லம்மாள் ஆகியோரை எழுப்பி மாடிக்கு சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பட்டை, மண்வெட்டி கணை ஆகியவற்றால் பார்வதியை சரமாரி தாக்கினார்கள். அவரை அடிக்காதீர்கள் என்று தடுத்த சுதாவுக்கும் சரமாரி அடி விழுந்தது. இதில் பார்வதி, சுதா ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால், அந்தப்பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், செந்தட்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கள்ளக்காதல் ஜோடியை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே பார்வதி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்





Monday, November 8, 2010

சந்தேகம்


கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கடம்பன் இவரது மகள் கவிதாபாரதி(23). இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த அருள்மொழி(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குழந்தை இல்லை. அருள்மொழி திருப்பூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்திலுள்ள வீட்டு தண்ணீர் தொட்டியில் கவிதாபாரதி பிணமாக கிடந்தார். வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே கிடந்தது. கவிதாபாரதியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தங்கச்செயின் காணாமல் போயிருந்தது. துடியலூர் பெண் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவர் அருள்மொழியை கைது செய்தனர். திருமணமாகி ஓராண்டுக்குள் கவிதாபாரதி மர்மமான முறையில் இறந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அருள்மொழி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கவிதாபாரதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது; ஆண் நண்பர்கள் அதிகளவில் இருந்தனர். தினமும் இரவு நேரத்தில் அவளுக்கு மொபைல் போனில் அழைப்புகள் வரும். நீண்ட நேரம் பேசுவாள். கேட்டால் எதையாவது சொல்லி மழுப்புவாள். கோவையில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். ஆனால், அடிக்கடி அங்கு போகாமல் ஆண் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். இதனால், அவளை கொலை செய்ய தீர்மானித்து கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கழிவறைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த தரைமட்டத் தொட்டியில் தள்ளி கொலை செய்தேன். போலீசாரை திசை திருப்ப கவிதாபாரதியிடம் இருந்த எட்டு சவரன் தங்க செயின் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பைக்கை சில அடிதூரம் திருடர்கள் இழுத்து சென்றதை போல செட்-அப் செய்து நாடகமாடினேன். இருந்தாலும், போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அருள்மொழி கூறினார்.