சென்னை காசிமேடு சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், ரவுடி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.இவருக்கும் வண்ணார பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த கெஜலட்சு மிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் செந்தில் அடிக்கடி அங்கு சென்று வந்தார். இது கெஜலட்சுமியின் இன்னொரு காதலர்களான செல்வம், பூபாலனுக்கும், கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் பிடிக்க வில்லை. இதையடுத்து பூபாலன், செந்திலை தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் பூபாலனை அடித்து உதைத்தார்.
இதனால் செல்வம்- பூபாலன் இருவரும் கூலிப்படை உதவியுடன் செந்திலை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு கெஜலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலை வெளியே இழுத்து வந்து கொலை செய்தனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபால குரு தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று கெஜலட் சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மோகன், மணிகண்டன், கல்லறை மூர்த்தி, மகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கள்ளக்காதலன் செல்வம் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும் பூபாலனும் கெஜ லட்சுமியுடன் பல மாதங்களாக உல்லாசமாக இருந்து வந்தோம். சமீபத்தில் ரவுடி செந்தில் எங்களது ஆசை நாயகியான கெஜலட்சுமியை அபகரித்து கொண்டான். செந்தில் ரவுடி என்பதால் எங்களால் கெஜலட்சுமியுடன் பழக முடியவில்லை.
கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் செந்தில் அங்கு வருவது பிடிக்க வில்லை. இதனால் செந்திலை கூலிப்படை உதவியுடன் கொன்றோம்.
அவனை நாங்கள் உயிரோடு விட்டிருந்தால் எங்களை தீர்த்து கட்டி இருப்பான். அவன் முந்துவதற்குள் நாங்கள் முந்தி விட்டோம்.
இவ்வாறு அவன் கூறினான்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பூபாலன் தலைமறைவாக உள்ளான். அவனை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment