Friday, October 29, 2010

கொலையும் செய்வாள்......

கிருஷ்ணகிரி அருகே 2 நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக சென்ற காரை நிறுத்தினார்கள்.

அந்த கார் நிற்காமல் சென்றதால் போலீசார் விடாமல் துரத்தினார்கள். வேகமாக சென்ற கார் நாகரசம்பட்டி அருகே ரோட்டோரம் இறங்கியது. அந்த வேளையில் காரில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி தப்பியோடினார்கள்.

விரட்டி சென்ற போலீசார் காரை சோதனையிட்ட போது காருக்குள் ஒரு ஆண் பிணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த பசுவராஜ் (வயது 28) என்பது உறுதி செய்யப்பட்டது.

பசுவராஜை அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமியார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கடாசலம் ஆகியோர் கொலை செய்துள்ளது வெட்ட வெளிச்சம் ஆனது. மேலும் பிணத்தை ராயக்கோட்டை ரெயில்வே பாதையில் வீசிவிட எடுத்துச்செல்லும் போது போலீசார் துரத்தியதால் பாதை மாறி சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கொலையுண்ட பசுவராஜின் மனைவி ராஜேஸ்வரி, அவரது தாயார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கசாடலம், அவரது நண்பர் சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்

பசுவராஜூக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு முன்பே, ராஜேஸ்வரிக்கும், வெங்கடாசலத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பின்பும், கள்ளக்காதலை இருவரும் வளர்த்துள்ளனர்.

இதையறிந்த பசுவராஜ், மனைவி மற்றும் கள்ளக்காதலன் வெங்கடாசலத்தை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடாசலத்துடன் ராஜேஸ்வரி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசில் பசுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியை கணவர் பசுவராஜுடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் வெங்கடாசலத்துடன் மனைவி ராஜேஸ்வரி ஓடிய சம்பவம், பசுவராஜுக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியை தினமும் அடித்து சித்ரவதை செய்தார். இதை தட்டிக்கேட்ட தாய் சவுந்தரியையும் அடித்தார். இதையடுத்து அவரது கொடுமை தாங்காமல் பசுவராஜை கொலை செய்ய தாய், மகள் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் திட்டம் தீட்டினார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாப்பாட்டில் 3 முறை விஷம் வைத்து கொடுத்தனர். ஆனால் அவர் சாகாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த கொலை முயற்சி சமீபத்தில் பசுவராஜுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து ஓசூரில் உள்ள தனது அண்ணனுக்கு தெரிவித்தார். இதுகுறித்து பேசுவதற்கு ஓரிரு நாளில் வருவதாக அவரது அண்ணன் கூறினார்.

அண்ணன் வந்தவுடன், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக பசுவராஜ் அனைவரையும் மிரட்டினார். இதனால் பயந்து போன அவர்கள், பசுவராஜை கொலை செய்ய மீண்டும் முடிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த பசுவராஜை, சுடிதார் துப்பட்டாவால் ராஜேஸ்வரி, அவரது தாய் சவுந்தரி ஆகிய 2 பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி படுகொலை செய்தனர்.

பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் வெங்கடாசலத்திடம் கூறினர். வெங்கடாசலம் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் வந்தார். பின்னர் உடலை ராயக்கோட்டை ரெயில்வேகேட் அருகே வீசிவிட்டு செல்லலாம் என்று காரில் வந்த போது போலீசார் விரட்டினர். தப்பிவிட வேண்டும் என்று கருதி காரை திருப்பத்தூர் ரெயில்வே கேட்டுக்கு வேகமாக ஓட்டினார்கள். ஆனால் போலீசார் அதற்குள் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.

Tuesday, October 19, 2010

காவல் காதல்

நெல்லை அருகே இரண்டு கள்ளக்காதலிகளை கொடூரமாக கொலை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர், தாமும் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசின் 9ம் பட்டாலியன் படையில் ஏட்டாக பணிபுரிபவர் உமாமகேஸ்வரி (36). 1997 முதல் தற்போது வரை அங்கேயே பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி, கோரி காலனியாகும். இவரது கணவர் இசக்கியப்பன் (40), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் ஏட்டாக உள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றுகிறார்.

மணிமுத்தாறு பட்டாலியன் அருகே பழைய குடியிருப்பில் தங்கி, பணிக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு சுதர்சன் (9) என்ற மகனும், சுபத்ரா (5) என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். உமாமகேஸ்வரியின் தாயார் மரியதங்கம் இவர்களுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உமாமகேஸ்வரி, பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி, பட்டாலியன் அலுவலகத்திற்கு சென்றார்; நேற்று காலை வீடு திரும்பவில்லை. பட்டாலியன் அலுவலகம் அருகே இடிந்து போன கட்டடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த வழியே சென்ற பெண் காவலர் ஒருவர் பார்த்து, பட்டாலியன் அலுவலகத்திற்கு தகவல் கூறினார்.

இறந்து கிடந்த உமாமகேஸ்வரியின் வலதுதாடையில் பலத்த அரிவாள் வெட்டு இருந்தது. உடலில் வேறு சில காயங்களும் இருந்தன. நள்ளிரவில் கொலை நடந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தம் காய்ந்திருந்தது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கொடூரமான கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துப்பறியும் நாய், தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து உமாமகேஸ்வரியின் தாயார் தந்த புகாரில், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் காவலராக பணியாற்றும் இசக்கிமுத்து என்பவர் உமாமகேஸ்வரியை தம்முடன் வாழ வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இசக்கிமுத்து (32) நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர். மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரரான இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், இவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இசக்கிமுத்து, கீதா (39) என்ற பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்தார். இசக்கிமுத்துவின் உறவினரான கீதாவின் கணவர் பச்சமுத்து, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். இவர், அண்மையில் வெளிநாடு சென்று விட்டார். அதன் பின், கீதா அவரது தாயின் சொந்த ஊரான திட்டுவிளையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து அடிக்கடி இங்கு வந்து, கீதாவை சந்தித்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் பெண் போலீஸ் உமாமகேஸ்வரியை வெட்டி கொன்று விட்டு, இசக்கிமுத்து பைக்கில் நள்ளிரவில் பூதப்பாண்டிக்கு வந்தார். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்துக்கு சென்று, மொபைல்போனில் அங்கு வரும்படி கீதாவை அழைத்துள்ளார். ஆனால் கீதா செல்ல மறுத்தார்.மறுநாள் அதிகாலை, கீதாவின் வீட்டுக்கு சென்ற இசக்கிமுத்து, அவரை பாழடைந்த கட்டடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு, இசக்கிமுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இசக்கிமுத்து மணிமுத்தாறு பட்டாலியனில் துப்பாக்கிகளை பாதுகாக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இதை பயன்படுத்திய அவர், ஒரு துப்பாக்கியை திருடிக் கொண்டு வந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து 26 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட கீதாவுக்கு சுருதி (15) என்ற மகளும், திவாகர் (13), பிரபாகர் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

Thursday, October 14, 2010

காமபசி

திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருச்சி தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி  நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தாகவும். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்றும். பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கெடுத்து விட்டதாகவும்.அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளான். இதனால், 2008ம் ஆண்டு தான் கர்ப்பமடைந்ததாக புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, தன்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளான். இத்தகவல் தான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன்,தன்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர் என்றும் பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, "இனிமேல் அவரை பார்க்கக் கூடாது என்றும்  இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது' என மிரட்டியுள்ளார்

இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர் . சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் ஏன் முன்பே புகார் கூறவில்லை என்பது யோசிக்க வேண்டிய விடயம் ஆகிறது. இதில் ஏதும் உள்குத்து இருக்கும் போல தான் தெரிகிறது.எது எப்படியோ பாதரியாரின் காமபசி அந்த பெண்னை இறையாக்கி மகிழ்ந்துள்ளது கண்டிக்கதக்கது.

Thursday, October 7, 2010

உல்லாசம்


மாதவரம் பொன்னியம் மன் மேடு சந்திரபிரபு காலனியைச் சேர்ந்தவர் சுந்தரவதனம். கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி சாந்தி (42). ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். சுந்தரவதனம் வேலைக்கு சென்ற சமயத்தில் வீட்டில் சாந்தி படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

இந்த மர்ம சாவு குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினர்.

இதில் சாந்தியின் கள்ளக் காதலன் லோகநாதன் (43) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இவர் புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர். மெக்கானிக்கடை வைத்துள்ளார்.

டிரைவர் சுந்தரவதனம் தனது காரை ரிப்பேர் பார்க்க லோகநாதனின் மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்வதுண்டு. அப்போது அவரது மனைவியும் உடன் சென்று வருவார்.

இதில் மெக்கானிக் லோகநாதனுக்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சுந்தரவதனம் வீட்டில் இல்லாத சமயங்களில் லோகநாதன், சாந்தியை சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். சாந்தியின் மகள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் கடனும் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டிருக்கிறார். இப்போது பணம் இல்லை என்று சாந்தி கூறியதால் ஆவேசத்தில் சேலையால் கழுத்தை நெரித்து சாந்தியை கொன்று விட்டு ஓடி விட்டார்.

சாந்தியின் கணவரிடம் போலீசார் விசாரிக்கும் போது லோகநாதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார் என்று கூறியதால் சந்தேகப்பட்டு போலீசார் லோகநாதனை பிடித்து விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Monday, October 4, 2010

காமவெறியன்


பாளை கொக்கிரகுளம் பகுதியைச்சேர்ந்த சிறுமி முருகம்மாள் என்ற 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தாமிரபரணி ஆற்றில் ஒரு சாக்கு மூட்டையில் கிடந்திருக்கிறாள். அவளது அடிவயிற்றில் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக்காயமும், உடலில் ஆங்காங்கே நகக்கீரல்களும், பல்லால் கடித்த காயங்களும் இருந்தன. பின் தலையில் பயங்கரமாக தாக்கியதில் மண்டை உடைந்து பெரிய ரத்தக் காயமும் இருந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை ஒரு லுங்கி மற்றும் போர்வையில் சுற்றி சாக்கு மூட்டைக்குள் திணித்து ஆற்றில் வீசப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடினார்கள்.
இதில் சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வேலு என்ற கழுதைவேலு (வயது 48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது வேலு, சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டான் அந்த் காம கொடூரன். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தனது சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி என்றும். அங்கு தங்கி இருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்த்தாகவும். சம்பவத்தன்று தனது மனைவி மகள் வீட்டுக்கு சென்று விட்டதால் தனிமையாக இருந்த தனக்கு “செக்ஸ்” வெறி ஏற்பட்டது என்றும். அப்போது பக்கத்து வீட்டுச்சிறுமி முருகம்மாள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் தனக்கு காம வெறி அதிகரித்தது அவளது வாயை துணியால் பொத்தி கற்பழித்த்தாகவும். இதனால் போலீசில் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து, சிறுமியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்தததாக வாகுமூலம் அளித்துள்ளான். இவனை போன்ற காமவெறியன்களுக்கு தயவு தாட்சனையின்றி கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் அடுத்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்.