Monday, September 27, 2010

நீயா..? நானா..?


சென்னை காசிமேடு சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், ரவுடி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.இவருக்கும் வண்ணார பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த கெஜலட்சு மிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் செந்தில் அடிக்கடி அங்கு சென்று வந்தார். இது கெஜலட்சுமியின் இன்னொரு காதலர்களான செல்வம், பூபாலனுக்கும், கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் பிடிக்க வில்லை. இதையடுத்து பூபாலன், செந்திலை தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் பூபாலனை அடித்து உதைத்தார்.
இதனால் செல்வம்- பூபாலன் இருவரும் கூலிப்படை உதவியுடன் செந்திலை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு கெஜலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலை வெளியே இழுத்து வந்து கொலை செய்தனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபால குரு தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று கெஜலட் சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மோகன், மணிகண்டன், கல்லறை மூர்த்தி, மகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கள்ளக்காதலன் செல்வம் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும் பூபாலனும் கெஜ லட்சுமியுடன் பல மாதங்களாக உல்லாசமாக இருந்து வந்தோம். சமீபத்தில் ரவுடி செந்தில் எங்களது ஆசை நாயகியான கெஜலட்சுமியை அபகரித்து கொண்டான். செந்தில் ரவுடி என்பதால் எங்களால் கெஜலட்சுமியுடன் பழக முடியவில்லை.
கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் செந்தில் அங்கு வருவது பிடிக்க வில்லை. இதனால் செந்திலை கூலிப்படை உதவியுடன் கொன்றோம்.
அவனை நாங்கள் உயிரோடு விட்டிருந்தால் எங்களை தீர்த்து கட்டி இருப்பான். அவன் முந்துவதற்குள் நாங்கள் முந்தி விட்டோம்.
இவ்வாறு அவன் கூறினான்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பூபாலன் தலைமறைவாக உள்ளான். அவனை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, September 21, 2010

தகாத உறவு


பிரசாத் நகரை சேர்ந்தவன் லலித் ரதாவால் (22). பள்ளி வேன் டிரைவர். பாபா நகரில் வசிக்கும் விதவை பெண்ணின் 12 வயது மகளையும் 10 மற்றும் 7 வயதுள்ள மகனையும் லலித் தனது வேனில் பள்ளிக்கு கூட்டி செல்வான். ஆனால் இக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் இரண்டு தம்பிகளுடனும் தகாத உறவு கொண்டுள்ளான். இவனோடு நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொடுமையை செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள். அதில் ஒருவன் சிறுமி படிக்கும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவன். இவர்கள் கும்பலாக சேர்ந்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக இந்த கும்பல் குழந்தைகளை இப்படி சித்ரவதை செய்துள்ளது. அவர்களுக்கு போதை ஊசியும் போட்டுள்ளனர். தகாத உறவு கொள்ளும் காட்சியை செல்போனிலும் படம் பிடித்து வைத்துள்ளனர். வெளியே சொன்னால் உங்கள் அம்மாவை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் இந்த கொடுமையை பற்றி குழந்தைகள் வெளியே சொல்லாமல் இருந்தன. சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் உடலில் ஊசி குத்தியதற்கான அடையாளங்களை பார்த்து தாய் சந்தேகமடைந்தார். சிறுமியிடம் விசாரித்தபோதுதான் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நிராதரவாக இருக்கும் அப் பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேன் டிரைவர் லலித்திடம் கேட்டார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக அவரையும் லலித் மிரட்டினான். வேறு வழியில்லாத பெண், தன் வீட்டில் குடியிருப்பவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவர் தனக்கு தெரிந்த அரசியல்வாதியிடம் கூற அந்த அரசியல்வாதிதான் தைரியம் அளித்து இதுபற்றி போலீசில் புகார் செய்ய வைத்திருக்கிறார்ர. டிரைவர் லலித் கைது செய்யப்பட்டான். நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்ற அவனை அழைத்துவந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை அடித்து உதைத்தது. ஆத்திரத்தோடு இருந்த கூட்டத்திடம் இருந்து அவனை போலீசார் மீட்டு. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Friday, September 17, 2010

கல்நெஞ்சம்


உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அரியூரை சேர்ந்தவர் இன்பநிலா (23). நேற்று முன்தினம் இரவு பெராம்பட்டு கிராமத்துக்கு குழந்தை சடலத்துடன் கதறியபடி வந்துள்ளார். ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறி, அண்ணாமலைநகர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, ‘‘குழந்தையுடன் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகைக்கு வந்தாதகவும். உதவி செய்வதாக கூறிய 2 பேர்,தன்னை இருசக்கர வண்டியில் ஏற்றிச் சென்று கற்பழிக்க முயன்றனர் என்றும் மறுத்ததால் தன் குழந்தையை கொன்றுவிட்டனர்’’ என கூறியுள்ளார் இன்பநிலா. குழந்தை சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்பநிலாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தனிப்படை அமைத்து வாலிபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, இன்பநிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, உண்மைகளை கக்கியுள்ளார். தன் கணவர் பாபு இறந்து 10 மாதங்கள் ஆகிறது என்றும் சென்னையில் கட்டிட வேலை செய்து வந்ததாகவும். அப்போது சிதம்பரத்தை அடுத்த கீழக்குண்டலபாடியை சேர்ந்த சந்துரு என்ற பாலசந்தருடன் (24) பழக்கம் ஏற்பட்டது என்றும். சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்து விட்டதாகவும். அவரைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தாகவும் கூறியுள்ளார் இருவரும் பழைய கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று. அங்கு உல்லாசமாக இருந்தபோது குழந்தை கத்தியுள்ளது சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் குழந்தையை காலால் மிதித்து கொன்றுள்ளார்கள். கள்ளக்காதலன் பாலசந்தரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற குழந்தையையே கல்நெஞ்சம் படைத்த தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, September 14, 2010

காதல் மலர்ந்தது


சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரேணுகா என்ற லட்சுமி (27). வாய் பேசமுடியாதவர். திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த 22ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை அடுத்த சுமந்திரம்பேடு ஏரியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சோமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (30) என்பவர் ரேணுகா என்ற லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்திருக்கிறார், விஸ்வநாதன். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம் அப்போது, லட்சுமியுடன் விஸ்வநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. விஸ்வநாதன், கடந்த 21ம் தேதி, லட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை இருங்காட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். சுமந்திரம்பேடு ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்து, போதை தலைக்கேறிய நிலையில் லட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி. மறுத்துவிட ஆத்திரமடைந்த விஸ்வநாதன், போதையில் லட்சுமியை நிர்வாணப்படுத்தியும், அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார். விஸ்வநாதனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Friday, September 10, 2010

துரோகம்


திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை செய்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றியிருக்கிறார்கள். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதை உறுதி செய்துள்ளனர். ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷுக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது.

கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.