சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரேணுகா என்ற லட்சுமி (27). வாய் பேசமுடியாதவர். திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த 22ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை அடுத்த சுமந்திரம்பேடு ஏரியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சோமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (30) என்பவர் ரேணுகா என்ற லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்திருக்கிறார், விஸ்வநாதன். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம் அப்போது, லட்சுமியுடன் விஸ்வநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. விஸ்வநாதன், கடந்த 21ம் தேதி, லட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை இருங்காட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். சுமந்திரம்பேடு ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்து, போதை தலைக்கேறிய நிலையில் லட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி. மறுத்துவிட ஆத்திரமடைந்த விஸ்வநாதன், போதையில் லட்சுமியை நிர்வாணப்படுத்தியும், அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார். விஸ்வநாதனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment