Friday, March 25, 2011

திருட்டுப்பூனை


கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தை சேர்ந்தவர். சுரேஷ் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). இவருக்கும், வடபழனி ஒட்டகப் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (37) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.இது சுரேஷ் கண்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் ஜெயலட்சுமியை கண்டித்தார்.

இதனால் கோபித்துக் கொண்ட ஜெயலட்சுமி, காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பிறகும் ரமேஷ்-ஜெயலட்சுமி இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்த ஜெயலட்சுமி, ரமேசை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரவும், ஜெயலட்சுமி, காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

இன்று காலையில் ரமேசின் வீட்டுக்கு சென்றார்.அங்கு வைத்து இருவருக்கு மிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி ரமேஷ் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய லட்சுமியும், ரமேசை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, ஜெயலட்சுமியின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஜெயலட்சுமி பலியானார்.பின்னர் ரமேஷ், ரத்தம் சொட்ட... சொட்ட... இரும்பு கம்பியுடன் நேராக வடபழனி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இன்ஸ்பெக்டர் குணசேகரன் அவரிடம் விசாரணை நடத்தினார்.ரமேஷ் வீட்டின் மாடியில் தனியாக அறை ஒன்று கட்டியுள்ளார். அதில்தான் அவர் தங்கி இருப்பார். நேற்று இரவு சென்னைக்கு வந்த ஜெயலட்சுமி, ரமேசுடன் மாடியில் தங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் ஜெயலட்சுமி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ரமேஷ் போதகருக்கு படித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தினமும் பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து இவர் உல்லாசமாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி மக்களும் போலீசாரிடம் முறையிட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.